எல்லைகளை திறக்கும் ஐரோப்பிய ஒன்றியம்

ஐரோப்பிய ஒன்றியநாடுகள் தமது நாட்டு எல்லைகளை வெளிநாட்டினருக்கு ஜூலை யில் மீண்டும் திறக்க எத்தனிக்கின்றன .கொரோனா வைரசினால் ஏற்பட்டுள்ள உலகளாவிய பொருளாதார வீழ்ச்சியின் கோர பிடியில் இருந்து தமது நாடுகளை மீட்பதற்காக இந் நாடுகளில் தலைவர்கள் இந்த முடிவை எடுத்திருப்பதாக தெரிகிறது .

உலகெங்கிலும் உள்ள COVID-19 இனால் காவு கொள்ளப்பட 411,000 மரணங்களில் பாதி ஐரோப்பாவில் நிகழ்ந்துள்ளது.

இப்போது இக் கண்டம் ஒரு வரலாறு காணாத மந்தநிலையின் வீழ்ச்சியிலிருந்து மீள முயற்சிக்கிறது.மக்கள் முடக்கம் மற்றும் வணிகத்தின் மீதான கட்டுப்பாடுகளால் உயிரைக் காப்பாற்ற முயன்ற போதும் இது உலக வர்த்தகத்தை மூர்சையாக்கி உள்ளது .

பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (O .E .C .D ) கணிப்பின்படி , உலக பொருளாதாரம் வைரஸ் பணிநிறுத்தம் காரணமாக இந்த ஆண்டு குறைந்தது ஆறு சதவிகிதம் சுருங்கப் போகிறது.

அடுத்த ஆண்டு இறுதிக்குள், வருமான இழப்பு “போர்க்காலத்திற்கு வெளியே கடந்த 100 ஆண்டுகளில் முந்தைய மந்தநிலையை” விட அதிகமாக இருக்கும் என்று முன்னறிவிப்பு எச்சரித்தது.

– ‘படிப்படியான தளர்வுகள் –

எல்லை நடவடிக்கைகள் குறித்து ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் இறுதிக் கருத்துக்களைக் கொண்டிருக்கையில், பிரஸ்ஸல்ஸ் ஜூலை 1 ம் தேதி தொடங்கி ஒன்றியத்துக்கு வெளியில் இருந்து வரும் பயணிகளுக்கு வெளிப்புற எல்லைகளை “படிப்படியாகவும் பகுதியாகவும்” மீண்டும் திறக்க பரிந்துரைக்கிறது என்று தூதரக தலைவர் ஜோசப் பொரெல் புதன்கிழமை தெரிவித்தார்.

பயணத்தின் எதிர்காலம் குறித்து ஆழ்ந்த நிச்சயமற்ற தன்மை இருந்தபோதிலும், கடற்கரைகள் மற்றும் கண்டத்தின் பிற சிறந்த சுற்றுலா தளங்கள் ஏற்கனவே பார்வையாளர்களுக்காக தயாராகி வருகின்றன.

நெருக்கடியால் பாதிக்கப்பட்ட விமானத் தொழிலில், கேபின் குழுவினரும் பயணிகளும் புதிய நெறிமுறைகள் மற்றும் புதிய கால அட்டவணைகளுக்கு ஏற்ப மாற்ற முயற்சிக்கின்றனர், அதே நேரத்தில் ஐரோப்பிய அரசாங்கங்களும் ஒன்றியத்துக்குள் விமான இணைப்புகளை மீண்டும் உருவாக்க வெவ்வேறு வேகத்தில் நகர்கின்றன.

Comments are closed.