ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை தாக்கத்தை ஏற்படுத்தியதா?

2019 பொதுத் தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது காங்கிரஸ் கட்சி. அத்தோல்விக்கு பொறுப்பேற்று தலைவர் பதவியிலிருந்து விலகினார் ராகுல் காந்தி. 20 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற தலைவர் தேர்தலில், எந்த கருத்தையும் கூறாமல் விலகி நின்றார். அதே நேரத்தில் தனது பாரத் ஜோடோ யாத்திரையில் கவனத்தை செலுத்தினார். ட்விட்டரில் அரசியல் செய்கிறார் என்பது போன்ற விமர்சனங்களை ராகுல் காந்தி மீது எதிர்க்கட்சியினர் கூறி வந்தனர். இந்நிலையில் ராகுல்காந்தி யாத்திரையின் மூலம் மக்களோடு மக்களாக கலந்து, அவர்களின் பிரச்னையை ஆய்வு செய்ததாக காங்கிரஸ் கட்சியினர் கூறுகின்றனர்.

நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி எழுப்பிய கேள்விகளுக்கு பதில் கூற முடியாத ஆட்சியாளர்கள், அவர் மீது தனிப்பட்ட தாக்குதலை நடத்தியதாகவும் காங்கிரசார் குற்றம்சாட்டுகின்றனர். காங்கிரஸ் கட்சி வலுவிழந்து வருகிறது என்ற கருத்து நிலவும் நிலையில் ராகுல்காந்தி நடைபயணம் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதாக மூத்த பத்திரிகையாளர்கள் கூறுகின்றனர் ராகுல் காந்தியின் நடைபயணம் பாஜகவிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் முதிர்ச்சியான தலைவராக மாறியுள்ளதாகவும் பத்திரிகையாளர்கள் தெரிவிக்கின்றனர்

தொடர் தோல்விகளைச் சந்தித்துவந்ததால், காங்கிரஸ் கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் சோர்வடைந்த நிலையில் ராகுல் காந்தி தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தார். இதனை தொடர்ந்து காங்கிரஸ் தலைவர்கள் யாரும் வீட்டில் உட்கார்ந்திருக்க முடியவில்லை. இது, வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில் எந்தளவுக்கு காங்கிரஸ் கட்சிக்கு கைகொடுக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave A Reply

Your email address will not be published.