16 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: பிரபல சாமியாருக்கு ஆயுள் தண்டனை

ஆசாராம் பாபு என்ற 81 வயதான ஆன்மிக குரு, பெண் ஒருவரை உறவில் ஈடுபட வற்புறுத்தியதுடன், பக்தர் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பாலியல் துஷ்பிரயோக வழக்கில் சிக்கிய சாமியார்
இந்தியாவின் ஆசாராம் பாபு என்ற 81 வயதான ஆன்மிக குரு, பெண் ஒருவரை தன்னுடன் பாலியல் உறவில் ஈடுபடுமாறு கட்டாயப்படுத்தி உள்ளார் மற்றும் மற்றொரு பெண் பக்தரை கைதியாக வைத்து இருந்ததுடன் அவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்து இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

இவர் 2001 மற்றும் 2006 க்கு இடையில் பெண்ணை பலமுறை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார்.

மேலும் 2018ம் ஆண்டு ராஜஸ்தானில் 16 வயது பக்தரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட சாமியார் ஆசாராம் பாபு ஏற்கனவே பாலியல் வழக்கு ஒன்றில் ஆயுள் தண்டனை பெற்று இருந்தார்.

இந்நிலையில் அவருக்கு பல பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவர் 228 பவுண்டுகள்(23,000 ரூபாய்) மற்றும் 496 பவுண்டுகள்(50,000) அபராத தொகையை வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கொலை மிரட்டல்
இந்தியா முழுவதும் மில்லியன் கணக்கான பின்தொடர்பவர்களை கொண்ட குரு ஆசாராம் பாபு, 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார், அப்போது அவருடைய பெற்றோர்கள் அறைக்கு வெளியே ஜோடி பிரார்த்தனை செய்து கொண்டிருந்தனர்.

சிறுமியை குணப்படுத்தியதாக பெற்றோரை நம்ப வைத்த பாபு, சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து விட்டு, யாரிடமாவது சொன்னால் கொன்று விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.