பட்ஜெட் தினத்தில் கவனம் ஈர்த்த நிர்மலா சீதாராமனின் சிவப்பு நிற புடவை!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தனது 5வது பட்ஜெட் தாக்கலுக்கு, கருப்பு பார்டர் கொண்ட பிரகாசமான சிவப்பு நிற புடவையில் வருகை புரிந்தார். 2024 மக்களவைத் தேர்தலுக்கு முந்தைய முழு பட்ஜெட் இதுவாகும். கைத்தறி புடவை மீது அதீத காதல் கொண்ட நிதியமைச்சரின் பட்ஜெட் சேலைகள் சமூக வலைதளங்களில் கவனம் பெறும்.

பொதுவாக, நிதியமைச்சர் பட்ஜெட் நாளில் பிரைட்டான வண்ணமயமான உடைகளைப் பயன்படுத்துவார். கடந்த ஆண்டு, ஒரு மாற்றத்திற்காக மெரூன் நிற கைத்தறி புடவையை அணிந்தார். 2021ம் ஆண்டில், நிர்மலா சீதாராமன் சிவப்பு மற்றும் வெள்ளை நிற போச்சம்பள்ளி பட்டு சேலையை அணிந்திருந்தார்.

2020ல் பட்ஜெட்டில் நீல நிற பார்டருடன் மஞ்சள் நிற பட்டுப் புடவை அணிந்து வந்தார். நிர்மலா சீதாராமன் தனது முதல் பட்ஜெட் தாக்கலின்போது தங்க நிற பார்டரில் இளஞ்சிவப்பு நிற மங்கல்கிரி பட்டுப் புடவை உடுத்தி இருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.