மக்களும் சர்வதேசமும் என் பக்கம்! – தொழிற்சங்கப் போராட்டம் மூலம் எதனையும் சாதிக்க முடியாது என்கிறார் ரணில்.

“நாட்டு மக்கள் தற்போது என் பக்கமே நிற்கின்றார்கள். சர்வதேச சமூகமும் எனக்கு ஆதரவு வழங்குகின்றது. அதனூடாகவே சர்வதேச நாணய நிதியத்தின் கடனுக்கு அங்கீகாரம் கிடைத்தது. இந்நிலையில், தொழிற்சங்கங்களின் போராட்டங்கள் – பணிப்புறக்கணிப்புக்கள் மூலம் எதனையும் இங்கு சாதிக்க முடியாது என்பதைச் சம்பந்தப்பட்ட தரப்பினர் கவனத்தில்கொள்ள வேண்டும்.”

இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

“வரி விதிப்பு தவிர்க்க முடியாத ஒன்று. சர்வதேசத்திடமிருந்து வாங்கிய – வாங்குகின்ற கடனை அடைக்க வரி விதிப்பு மிகவும் அவசியம். அரசுக்கு மிரட்டல் விடுக்கும் தொழிற்சங்கத்தினர் இது குறித்து அறிந்திருப்பார்கள்” – என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

“எதிர்க்கட்சிகளுக்குள் பிளவுகள் இருப்பது போல் தொழிற்சங்கங்களுக்குள்ளும் பிளவுகள் உள்ளன. இவற்றில் சுயலாப சிந்தனை கொண்டவர்கள் போராட்டங்களை நடத்துகின்றார்கள். ஆனால, எதனையும் சாதிக்க முடியாது என்பதைச் சம்பந்தப்பட்ட தரப்பினர் கவனத்தில்கொள்ள வேண்டும்” – என்றும் ஜனாதிபதி மேலும் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.