கட்டுநாயக்காவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட உள்ளது! சிசிடிவி அமைப்பு விரிவாக்கம்!

கட்டுநாயக்க விமான நிலையத்தின் கண்ணியம் மற்றும் நட்புறவை கெடுக்கும் விதத்தில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடும் நபர்களுக்கான அபராதத்தை 25000 ரூபாவிலிருந்து 1 லட்சம் ரூபாவாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இவ்வாறான முறைகேடுகளில் ஈடுபடுவோரை பிடிக்க சிவில் பாதுகாப்பு குழுவொன்றை நியமிப்பதற்கும் சிசிடிவி கமெரா அமைப்பை விரிவுபடுத்துவதற்கும் அமைச்சர் தீர்மானித்துள்ளார்.

இந்த முறைப்பாடுகளைப் பெறுவதற்கு விசேட கவுண்டர் ஒன்றை ஏற்படுத்தவும் அமைச்சர் தீர்மானித்துள்ளார்.

பல விமான நிலையங்களில் உள்ள மரியாதை மற்றும் நட்புறவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இல்லை என வெளிநாட்டவர்களிடமிருந்து பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.