சூரிச் பணியக குழந்தை இயேசு ஆலய பெருவிழா.

சூரிச் பணியக குழந்தை இயேசு ஆலய பெருவிழா

சுவிஸ் நாட்டில் சூரிச் பணியக இறைமக்களால் வருடா வருடம் கொண்டாடப்படும் குழந்தை இயேசு ஆலய பெருவிழாவானது 06.09.2020 ஞாயிற்றுக்கிழமை மாலை 3:00 மணியளவில் சுவிஸ் தமிழ் கத்தோலிக்க ஆன்மிகப் பணியக இயக்குனர் அருட்பணி டக்லஸ் அடிகளாரின் ஒழுங்குப்படுத்தலின் கீழ் சூரிச் பணியக இறைமக்களினால் மிகவும் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது.

வருடா வருடம் பல மாணிலங்களில் இருந்தும் இறைமக்கள் வருகை தந்து குழந்தை இயேசுவின் ஆசீரை பெற்றுச் செல்லுவது வழமையாக இருப்பினும் இந்த வருடம் கொரோனா தொற்றுக் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட இறைமக்கள் மாத்திரமே கலந்து கொள்ள கூடியாதாக அமைந்துள்ளது.

இவ் திருவிழா திருப்பலியினை மன்னார் மறைமாவட்ட அருட்பணியாளர் பிரான்சிஸ் மரிடீ கோல் அடிகளார் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்து இறையாசீர் வழங்கினார்.

திருப்பலி நிறைவில் அருட்தந்தை டக்லஸ் அடிகளார் திருவிழா திருபலியை சிறப்பித்த பணியக இறைமக்களுக்கும், பாடகர்குழாம், பீடப்பணியாளர்கள், வழிபாட்டுக்குழுவினர், ஆன்மிக பணியக உறுப்பினர்கள், அயல் பணியக இறைமக்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்திருந்தார்.

இறுதியில் குழந்தை இயேசுவிற்கு புகழ் மாலை பஜனை பாடப்பட்டு , அனைத்து குழந்தை செல்வங்களுக்காகவும் விசேட விதமாக செபிக்கப்பட்டு அருட்தந்தை மரிடிகோல் அடிகளாரினால் இறைமக்கள் அனைவருக்கும் குழந்தை இயேசுவின் திருச்சுருப இறையாசீர் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.