மீன் ப்ரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: தொடங்கியது மீன்பிடி தடைக்காலம்

கடல்வாழ் உயிரினங்கள் இனப்பெருக்கத்திற்காக, ஏப்ரல், மே மாதங்களில் மீன் பிடிக்க, மத்திய அரசு ஆண்டு தோறும் தடை விதிக்கிறது. இக்காலக் கட்டத்தில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் என்பதால் மீன்வளத்தை பாதுகாக்க இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டிற்கான மீன்பிடி தடை காலம் தமிழகத்தின் கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் நேற்று நள்ளிரவு துவங்கி, ஜூன் 14-ம் தேதி வரை, மொத்தம் 61 நாட்கள் அமலில் இருக்கும்.

தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் சுமார் 15 ஆயிரம் விசைப்படகுகள் கரைந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த நாட்களில் மீன்களின் விலை கடுமையாக உயரக்கூடும் என்பதால் அசைவப் பிரியர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று காசிமேடு, வானகரம், திருவான்மியூர், சிந்தாதிரிப்பேட்டை, காவாங்கரை,பெரம்பூர்,வில்லிவாக்கம்,பெரம்பூர்,வில்லிவாக்கம், நொச்சிக்குப்பம்,பட்டினப்பாக்கம் உள்ளிட்ட சென்னையின் முக்கிய மீன் மார்கெட்டில் மீன்களை வாங்க அசைவ பிரியர்கள் குவிந்தனர்.

மீன்பிடி தடை காலங்களில் மீன்களின் விலை கடுமையாக உயரும். ஆனால் இந்த முறை தடைக்காலம் தொடங்கியுள்ளபோதும் மீன்கள் விலையில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யபட்டது. இது குறித்து பேசிய மீனவர்கள் தற்போது போதுமான அளவு மீன்கள் கையிருப்பு உள்ளதால் மீன்கள் விலையில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் ஆனால் வரும் காலங்களில் மீன்கள் இருப்பு குறைந்தால் மீன்கள் விலை உயர வாய்ப்பு உள்ளதாக கூறினர்.

Leave A Reply

Your email address will not be published.