துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம்- மக்கள் பீதி.

துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி கடந்த பிப்ரவரி 6-ந்தேதி சக்தி வாய்ந்த நில நடுக்கங்கள் ஏற்பட்டன. ரிக்டர் அளவில் 7 புள்ளிகளுக்கு மேல் பதிவான இந்த நில நடுக்கத்தில் ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தன.

நில நடுக்கத்தில் துருக்கி-சிரியாவில் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானார்கள். பெறும் பாதிப்பை சந்தித்துள்ள துருக்கி, அதிலிருந்து மெல்ல மீண்டு வருகிறது. இந்த நிலையில் துருக்கியில் மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டது. இன்று அதிகாலை அந்நாட்டின் அப்சின் நகரில் இருந்து 23 கிலோ மீட்டர் தொலைவில் தென்மேற்கே இன்று அதிகாலை நில நடுக்கம் ஏற்பட்டது.

இது ரிக்டர் அளவில் 4 ஆக பதிவானதாக அமெரிக்க புவிவியல் ஆய்வு மையம் தெரிவித்தது. 10 கி.மீ. ஆழத்தில் நில நடுக்கம் மையம் கொண்டிருந்தது. நில நடுக்கத்தை உணர்ந்ததும் மக்கள் வீடுகளில் இருந்து அவசரமாக வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.

நில நடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் பற்றி உடனடியாக தகவல் வெளியாக வில்லை. ஏற்கனவே நில நடுக்கத்தால் பெரும் துயரத்துக்கு உள்ளான மக்களுக்கு மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது பீதியை உண்டாக்கி இருக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.