இந்திய மருந்தை பாவித்த கண் நோயாளிகளுக்கு தொற்று!

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ப்ரெட்னிசோலோன் கண் சொட்டு மருந்துகளின் பயன்பாட்டிற்குப் பின் நோயாளிகளுக்கு தொற்று நிலைமைகள் தோன்றியதால், அவற்றைப் பயன்படுத்துவதை உடனடியாக தவிர்க்குமாறு சுகாதார அமைச்சகம் அனைத்து மருத்துவமனை இயக்குநர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உரிய மருந்து விநியோகம் வைத்தியசாலைகளுக்கு அனுப்புவதும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் மருத்துவ வழங்கல் பிரிவு தெரிவித்துள்ளது.

தேசிய கண் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சைகளின் பின்னர் ஒரே நேரத்தில் மூன்று நோயாளர்களுக்கு தொற்றுக்கள் தோன்றியமையால் இந்த கேள்விக்குறியான நிலை ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

சத்திரசிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்ட அனைத்து பொருட்களும் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

48 மணித்தியாலங்களுக்குப் பின்னர் கிடைத்த அறிக்கைகளின்படி, இந்த நோய்த்தொற்றுகளுக்குக் ஒரு மருந்து காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.

நோய் தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்யப்பட்ட சத்திர சிகிச்சை தியெட்டர்களில் கிருமிகள் இருக்கக் கூடும் என கருதியமையால் , அவற்றை தற்காலீகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கண் வைத்தியசாலையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.