6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி அசத்தல் வெற்றி.

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இரண்டாவது போட்டி பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையே நடைபெற்றது. டாஸ் வென்ற மும்பை பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, பஞ்சாப் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பிரப்சிம்ரன் சிங் 9 ரன்னில் அவுட்டானார்.

கேப்டன் ஷிகர் தவான் 30 ரன்னும், மேத்யூ ஷார்ட் 27 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து இறங்கிய லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா ஜோடி மும்பை பந்துவீச்சை நாலாபக்கமும் சிதறடித்து சிக்சர், பவுண்டரிகளை விளாசியது. லிவிங்ஸ்டோன் அரை சதம் கடந்தார்.

இறுதியில் பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 214 ரன்களை குவித்தது. லிவிங்ஸ்டோன் 42 பந்தில் 82 ரன்னும், ஜிதேஷ் சர்மா 27 பந்தில் 49 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதையடுத்து, 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது.

இதில் அதிகபட்சமாக இஷான் கிஷான் 41 பந்துகளில் 75 ரன்கள் எடுத்து அசத்தினார். தொடர்ந்து, சூர்யகுமார் யாதவ் 66 ரன்களும், கேரமரன் கிரீன் 23 ரன்களும் எடுத்தனர். திம் டேவிட் 19 ரன்களுடன், திலக் வர்மா 26 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் விளையாடினர்.

இந்நிலையில், ஆட்டத்தின் முடிவில் 18.5 ஓவரில் 216 ரன்கள் எடுத்து மும்பை அணி ஆட்டத்தை கைப்பற்றியது.

Leave A Reply

Your email address will not be published.