திமுக: துணை பொது செயலாளர்கள் – ஆ.ராசா, பொன்முடி

ஏற்கனவே சுப்புலட்சுமி ஜெகதீசன், ஐ.பெரியசாமி, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் துணைப் பொதுச் செயலாளர்களாக உள்ள நிலையில் மேலும் இருவர் துணைப் பொதுச் செயலாளார்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக திமுக பொதுக்குழு கூட்டத்தில் தி.மு.க., பொதுச் செயலாளராகத் துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

திமுக தலைமை அலுவலகத்தில், அக்கட்சித் தலைவர் ஸ்டாலின் தலைமையில் துவங்கிய 70 பேர் பங்கேற்றனர்.. தமிழகம் முழுவதும் இருந்து வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இக்கூட்டத்தில், பொதுச் செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் தேர்வு செய்யப்பட்ட இருவருக்கும்.  ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்தார்.

தி.மு.க.,வின் துணை பொதுச் செயலாளர்களாக ஆ.ராசா, பொன்முடி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தற்பொழுது துணைப் பொதுச் செயலர்களின் எண்ணிக்கை 3 ல் இருந்து 5 ஆக உயர்ந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.