இலங்கைக்கு இரண்டாம் தவணைக் கடன்: 4 விடயங்களில் சோதனை! – IMF அதிரடி நடவடிக்கை.

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது தவணைக் கடனை இலங்கைக்கு வழங்குவதற்கு நான்கு விடயங்களில் சோதனைகள் ஆரம்பமாகியுள்ளன.

தேசிய மற்றும் சர்வதேச கடன் மறுசீரமைப்பு, மத்திய வங்கியைச் சுயாதீனமாக்கும் சட்டமூலம், அரச நிறுவனங்களை மறுசீரமைத்தல் மற்றும் அரச செலவு ஆகிய நான்கு விடயங்களைச் சர்வதேச நாணய நிதியம் சோதிக்கின்றது.

இம்மாதம் 11 ஆம் திகதி இலங்கை வந்திருந்து நேற்றுமுன்தினம் 23 ஆம் திகதி வரை தங்கியிருந்த சர்வதேச நாணய நிதியத்தின் விசேட நிபுணர்கள் இந்தச் சோதனையைத் தொடங்கியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.