மழை காரணமாக ஐ.பி.எல் இறுதிப்போட்டி ரத்து.

ஐ.பி.எல் 2023 தொடரின் இறுதிப்போட்டி நேற்றைய தினம் அகமதாபாத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோத இருந்தன. நேற்று மாலை 7.30 மணியளவில் டாஸ் போட இருந்த நிலையில், கனமழை காரணமாக டாஸ் போடுவது ஒத்தி வைக்கப்பட்டது.

இரவு 9.30 மணிக்கு முன்னதாக மழை நின்றால் போட்டி 20 ஓவர்களுக்கு தொடரும் என்றும், இரவு 12 மணிக்குள் மழை நின்றால் போட்டி 5 ஓவர்கள் மட்டுமே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அகமதாபாத்தில் மழை முழுவதுமாக நிற்காத நிலையில், ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும், ரிசர்வ் டே முறைப்படி ஆட்டம் இன்று மாலை 7.30 மணிக்கு நடைபெறும் என ஐ.பி.எல் நிர்வாகம் அறிவித்துள்ளது.இன்றும் போட்டி நடைபெறும் சூழல் இல்லாதபட்சத்தில் புள்ளிப் பட்டியலில் முதல் இடம் வகிக்கும் குஜராத் அணிக்கு கோப்பை வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

இதனால், கிரிக்கெட் மைதானத்திற்கு இறுதிப்போட்டியை காண ஆவலுடன் வந்த ரசிகர்கள் ஏமாற்றத்துடன் வெளியேறினர்.

IPL MEDIA

ADVISORY 28th May, 2023 TATA IPL Final

rescheduled to Monday, May 29th at 7:30PM IST The TATA IPL Final of the 2023 edition involving Chennai Super Kings and the Gujarat Titans has been rescheduled to the reserved day, Monday, May 29th due to incessant rain in Ahmedabad.

Fans who had their tickets for the TATA IPL Final on May 28th will now be able to enter the stadium with their existing physical tickets on May 29th.The BCCI would like to thank the fans present tonight for their patience and support.

We request them to come in big numbers to support their favourite IPL teams at the grand finale of the TATA IPL 2023 at the Narendra Modi Stadium, Ahmedabad. IPL

Leave A Reply

Your email address will not be published.