கொழும்பில் மாடியில் இருந்து தவறி விழுந்து சீனப் பொறியியலாளர் சாவு.

கொழும்பு, கொம்பனி வீதியில், யூனியன் பிளேஸில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடமைப்புத் தொகுதியின் 8 ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்து சீனப் பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

உதவிப் பொறியியலாளராகப் பணியாற்றிய 24 வயது சீனப் பிரஜையே இவ்வாறு சாவடைந்துள்ளார்.

நேற்று மாலை 5 மணியளவிலேயே இவர், கட்டடத்தில் இருந்து தவறி விழுந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

படுகாயமடைந்த சீன இளைஞர், கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.