லண்டன் வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு

லண்டன் சிசெஸ்டர் (Chichester) நகரின் டன்ஸ்டன் ( Dunston ) பகுதியில் நேற்று (13) இடம்பெற்ற வாகன விபத்தில், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தின் மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் மற்றொரு பெண் ஆபத்தான நிலையில் உள்ளார் எனவும் , அவரே காரை ஓட்டி சென்ற பெண் எனவும் தெரியவந்துள்ளது.

இவர்கள் சென்ற கார் ஒன்று மற்றுமொரு காருடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

லண்டனில் வசிக்கும் இறந்தவரின் உறவினர் ஒருவர் இறந்தவர்களை அடையாளம் காட்டியுள்ளார்.

திருமண நிகழ்விற்காக இரண்டு கார்களில் குடும்ப உறுப்பினர்கள் பயணித்ததாகவும், இவர்கள் பயணித்த பிஎம்டபிள்யூ ( BMW )கார் மற்றுமொரு காருடன் மோதியதில் விபத்து ஏற்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

உயிரிழந்தவர்களின் சடலங்களை யாழ்ப்பாணம் கொண்டு செல்வதற்கு ஏழு கோடி வரை இலங்கைப் பணம் செலவாகும் என்பதால், அவர்களது இறுதிக் கிரியைகளை லண்டனில் மேற்கொள்ள இறந்தவர்களின் உறவினர்கள் தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விபத்தில் இறந்துள்ளவர்கள் ஒரு வருடத்திற்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இருந்து கனடா சென்று , லண்டனில் நடைபெறும் திருமண நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக லண்டன் வந்திருந்ததாகவும் , உயிரிழந்துள்ளவர்கள் ஒரே குடும்ப உறுப்பினர்களான தாய் மற்றும் இரண்டு மகள்களே என தெரியவந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.