தொண்டமானின் மறைவு எமக்கும் பாரிய பேரிழப்பு : ஐக்கிய மக்கள் சக்தி கவலை

“அமரர் ஆறுமுகம் தொண்டமானின் திடீர் மறைவு, அவர் பிரதிநிதித்துவப்படுத்திய மக்களுக்கும் எமக்கும் பாரிய இழப்பாகும்.”

– இவ்வாறு எதிர்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ சபையில் நேற்று தெரிவித்தார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்சவால் முன்வைக்கப்பட்ட அமரர் ஆறுமுகம் தொண்டமான் தொடர்பான அனுதாபப் பிரேரணை மீது உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஆறுமுகம் தொண்டமானின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அஞ்சலிகள். அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் எனது தந்தையோடு நல்லுறவைப் பேணினார்.

இதனால் அப்போதிருந்த அரசால் பிரஜாவுரிமை இழக்கப்பட்ட ஒரு இலட்சம் தோட்டத் தொழிலாளர்களுக்கும் மீண்டும் பிரஜாவுரிமை வழங்குவதற்கு முடிந்தது.

எந்தவொரு நேரத்திலும், மக்களின் பிரச்சினைக்காக முன்னிலையாகி அப்பிரச்சினைகளுக்காக தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்திருந்தார்.

அவரது திடீர் இழப்பு, அவர் பிரிதிநிதித்துவப்படுத்திய மக்களுக்கும் எமக்கும் பாரிய இழப்பு. அவரது ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றேன்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.