திருமணம் ஆகாதவர்களுக்கு மாதந்தோறும் உதவித் தொகை…ஹரியானா அரசு..!

ஹரியானாவில் திருமணம் ஆகாதவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என அம்மாநில முதல் மந்திரி அதிரடி அறிவிப்பு விடுத்துள்ளார்.

அரியானா மாநிலம் கர்னல் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் அம்மாநில முதல் மந்திரி மனோகர் லால் கட்டார் பங்கேற்று மக்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது திருமணம் ஆகாத 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பென்ஷன் குறித்து அளித்த புகாருக்கு பதிலளித்த மனோகர் லால் கட்டார், அரியானாவில் திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் மாதாந்திர ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்தார்.

இந்த அறிவிப்பின்படி, 45 வயது முதல் 60 வயதுவரை திருமணம் ஆகாத நபர்களுக்கு அரசு விரைவில் உதவித் தொகை வழங்க அம்மாநில அரசு திட்டமிட்டயுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 2 லட்சம் பேர் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த திட்டம் குறித்து ஒரு மாதத்திற்குள் அரசு முடிவெடுக்கும் எனவும் அரியானா மாநில முதல் மந்திரி மனோகர் லால் கட்டார் தெரிவித்தார்.

மூத்த குடிமக்கள், கைம்பெண்கள், மாற்று திறனாளிகள், மாற்று பாலினத்தவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில் தற்போது திருமணம் ஆகாதவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.