ஏழு மணி நேரத்தில் செயலிகள் 10 மில்லியன் பயனர்களை Threads புதிய புரட்ச்சியை உருவாக்குமா?

Threads எனும் மெட்டா நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட சமீபத்திய சமூக ஊடகக் கருவி இன்று (06) அறிமுகப்படுத்தப்பட்டது.

முதல் நான்கு மணி நேரத்தில் 5 மில்லியன் சந்தாதாரர்கள் இணைந்துள்ளதாக நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய கருவி ட்விட்டர் நெட்வொர்க்கிற்கு கடுமையான அச்சுறுத்தலாக இருக்கலாம் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.

சில சந்தாதாரர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர், குறிப்பாக ட்விட்டர் உரிமையாளர் எலோன் மஸ்க் செய்த சமீபத்திய மாற்றங்கள் காரணமாக
இவ்வாறானதொரு பின்னணியில், புதிய கருவி விரைவில் பிரபலமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது மற்றும் இலங்கையர்கள் ஏற்கனவே இந்த புதிய சமூக ஊடகத்தில் அதிக எண்ணிக்கையில் இணைவதைக் காணமுடிகிறது.

சமூகவலைத்தள செயலிகள் 10 மில்லியன் பயனர்களை அடைய எடுத்த காலம்

Twitter : 24 மாதங்கள்
Facebook : 24 மாதங்கள்
Tiktok: 12 மாதங்கள்
Instagram: 11 மாதங்கள்
Google+: 16 நாட்கள்
Threads: 7 மணி நேரம்

Leave A Reply

Your email address will not be published.