தமிழக பொலிஸ் டி.ஐ.ஜி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை! அதிர்ச்சி சம்பவம்

தமிழக மாவட்டம் கோவையில் பொலிஸ் டி.ஐ.ஜி ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்ட சரக டி.ஐ.ஜியாக (Deputy Inspector General of Police) பதவி வகித்து வந்தவர் விஜயகுமார்.

2009ஆம் ஆண்டில் IPS தேர்ச்சி பெற்று காவல்துறை பணியில் சேர்ந்த விஜயகுமார் காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்ட கண்காணிப்பாளராக பணியாற்றினார்.

அதன் பின்னர் கோவை சரக டி.ஐ.ஜியாக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை தனது வீட்டில் விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

காலை 6 மணிக்கு நடைபயிற்சி முடித்து விட்டு முகாம் அலுவலகத்திற்கு வந்த விஜயகுமார், மெய் பாதுகாவலர் ரவி என்பவரின் துப்பாக்கியை வாங்கி தற்கொலை செய்துகொண்டதாக தெரிய வந்துள்ளது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

நேற்றிரவு துணை ஆணையர் குழந்தையின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட விஜயகுமார், கடந்த 2 நாட்களாக அவர் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், விஜயகுமார் கடந்த இரண்டு வருடங்களாக தூக்கமின்மைக்காக மாத்திரை பயன்படுத்தியதாகவும் முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார், விஜயகுமாரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொலிஸ் டி.ஐ.ஜி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.