லஞ்சப் பணத்தை வாயில் போட்டு விழுங்கிய அதிகாரி…!

அரங்கேற்ற வேளை படத்தில் கடிதத்தை பிரபு விழுங்கும் காட்சியை போலவே ஒரு சுவாரசிய சம்பவம் மத்திய பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது

மத்திய பிரதேசத்தின் கத்னி பகுதியில் வருவாய்த்துறை ஊழியராக பணியாற்றி வருபவர் கஜேந்திர சிங். ஒரு தனியார் நிறுவனத்திடம் லஞ்சப் பணத்தை வாங்கிய போது, லோக் ஆயுக்தா காவலர்கள் அவரை கையும் களவுமாக பிடித்தனர். ஆனால், அவர்களிடம் சிக்காமல் தப்பிக்க ரூ.5000 லஞ்சப் பணத்தை வாயில் போட்டு மென்று விட்டார் கஜேந்திர சிங்.

வாயில் இருக்கும் ரூபாய் நோட்டுகளை வெளியே எடுப்பதற்காக கஜேந்திர சிங்கை அழைத்துக்கொண்டு லோக் ஆயுக்தா காவல்துறையினர் மருத்துவமனைக்கு விரைந்தனர்.

கஜேந்திர சிங்கின் இந்த செயலால் அங்கிருந்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர், மேலும் கடும் முயற்சிக்கு பிறகு அவரது தொண்டைக்குழியில் அடைத்திருந்த ரூ.5000 நோட்டுக்களை வெளியில் எடுத்தனர். இதனை தொடர்ந்து, அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்ததை அடுத்து, கஜேந்திர சிங்கை லோக் ஆயுக்தா காவலர்கள் கைது செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.