புத்தூர் எவறஸ்ட் வி க வை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது பாடும் மீன் விக

யாழ். கால்பந்தாட்ட லீக் அங்கத்துவக் கழகங்களுக்கு இடையில் நடத்தும் 7 பேர் பங்கு பங்கு பற்றும் 25 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான கால்பந்தாட்டத் தொடரின் ஆட்டங்கள் இன்று 13 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அரியாலை கால்பந்தாட்ட பயிற்சி நிலைய மைதானத்தில் இடம் பெற்றது.

முதலாவது ஆட்டத்தில் யாழ். பாரதி விளையாட்டுக் கழக அணியை எதிர்த்து யாழ்.ஐக்கிய விளையாட்டுக் கழக அணி மோதியது. இதில் யாழ்.பாரதி விளையாட்டுக் கழக அணி 2 : 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இரண்டாவது ஆட்டத்தில் குருநகர் பாடும் மீன் விளையாட்டுக் கழக அணியை எதிர்த்து புத்தூர் எவறஸ்ட் விளையாட்டுக் கழக அணி மோதியது. இதில் குருநகர் பாடும் மீன் விளையாட்டுக் கழக அணி 8 : 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

Leave A Reply

Your email address will not be published.