காட்டு யானை தாக்கி இளம் குடும்பஸ்தர் மரணம்!

காட்டு யானை தாக்கி ஒருவர் சாவடைந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் அனுராதபுரம், மதவாச்சி பிரதேசத்தில் நேற்று (06) இரவு இடம்பெற்றுள்ளது.

ஒரு பிள்ளையின் தந்தையான 26 வயதுடைய பி.சாரங்க என்ற நபரே இதன்போது உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் வயல் நிலத்தைப் பாதுகாக்க வயலில் தங்கச் சென்ற வேளை யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மதவாச்சிப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.