பெண்ணை சாலையில் நிர்வாணப்படுத்திய இளைஞர்… தெலங்கானாவில் அதிர்ச்சி

தாயின் கண் முன்னரே இன்னொரு பெண்ணை சாலையில் வைத்து இளைஞர் ஒருவர் நிர்வாணப்படுத்தியுள்ளார். அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது.

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கடந்த ஞாயிறு அன்று, பெண் ஒருவர் துணிக்கடையில் இருந்து வந்து கொண்டிருந்தார். அப்போது இரவு 8 மணி இருக்கும். அந்த நேரத்தில் இளைஞர் ஒருவர் தன்னுடைய தாயாருடன் வந்து கொண்டிருந்தார். அவர், துணிக்கடையில் இருந்து வந்து கொண்டிருந்த பெண்ணுடன் வாக்குவாதம் செய்தார். பின்னர் பலவந்தமாக அவரது ஆடைகளை இழுத்து நிர்வாணப்படுத்தினார்.

அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த பெண் ஒருவர் இந்த மோசமான செயலை தடுத்து நிறுத்தி, ஆடை களையப்பட்ட பெண்ணை காப்பாற்ற முயன்றார். இதன்பின்னர் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் இளைஞருக்கு அடி கொடுத்த பெண்ணை காப்பாற்றினர். இதுபற்றி போலீசாரிடம் தகவல் தெரிவிக்கப்பட சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள் இளைஞரை கைது செய்தனர்.

இதற்கிடையே மகன் குற்றம் செய்தபோது அவரை தடுக்க அவரது தாயார் முன்வரவில்லை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட நபர் மீது இந்திய தண்டனை சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து சம்பவம் நடந்த பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். மணிப்பூரில் 2 மாதங்களுக்கு முன்பு என்ன நடந்ததோ அதுதான் ஐதராபாத்தில் இன்று நடந்துள்ளது என்று வேதனை தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.