ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி – சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா.

சென்னை: 7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

இந்நிலையில், இன்று இரவு 8.30 மணிக்கு தொடங்கிய இறுதிப் போட்டியில் இந்திய அணி மலேசியாவுடன் மோதியது. ஆட்டத்தின் முதல் பாதியில் மலேசியா 3-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

இரண்டாவது பாதியில் இந்திய வீரர்கள் 3 கோல் அடித்து அசத்தினர். இறுதியில், இந்திய அணி 4-3 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

Leave A Reply

Your email address will not be published.