எந்தத் தேர்தல் நடந்தாலும் தமிழ் மக்களின் ஆணை மொட்டுவுக்குக் கிடைக்கும்! – இப்படி நம்புகின்றார் பஸில்.

நாட்டில் எந்தத் தேர்தல் நடந்தாலும் தமிழ் மக்களின் ஆணை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குக் கிடைக்கும் என்று அக்கட்சியின் நிறுவுநரும் முன்னாள் அமைச்சருமான பஸில் ராஜபக்ச தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“தேர்தல் எப்போது நடக்கும் என்று என்னால் கூற முடியாது. அதற்கான அதிகாரம் என்னிடம் இல்லை.

மக்கள் ஆணை இன்னமும் எமக்கு இருக்கின்றது. அதனால்தான் மொட்டு அரசின் ஆட்சி தொடர்கின்றது. மொட்டு வீழ்ந்துவிட்டது என்று எதிர்க்கட்சிகள் கனவு காணக்கூடாது.

மொட்டு இன்னமும் வீரியத்துடன் எழும். மூவின மக்களையும் அரவணைத்தே நாம் பயணிப்போம்.

எந்தத் தேர்தல் நடந்தாலும் சிங்கள மக்களின் ஆணை மட்டுமல்ல தமிழ், முஸ்லிம் மக்களின் ஆணையும் மொட்டுக் கட்சிக்குக் கிடைக்கும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.