லேண்டர் தரையிறங்கும் நிகழ்வு: இணையவழியாக பங்கேற்கும் மோடி!

சந்திரயான்-3 விண்கலத்தில் செலுத்தப்பட்ட லேண்டர் இன்று தரையிறங்கும் நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி இணையவழியாக பங்கேற்கவுள்ளார்.

சந்திரயான்-3 விண்கலமானது எல்விஎம்-3 ராக்கெட் மூலம் கடந்த ஜூலை 14-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.

சுமார் ஒரு மாத பயணத்தை தொடர்ந்து, விண்கலத்தில் செலுத்தப்பட்ட விக்ரம் லேண்டரும், அதனுள் இருக்கும் ரோவா் சாதனமும் இன்று மாலை 6.04 மணிக்கு நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கவுள்ளது.

இந்த நிகழ்வை மாலை 5.20 முதல் இஸ்ரோ நேரலை செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்நிலையில், பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக தென்னாப்பிரிகா சென்றுள்ள பிரதமர் மோடி, இஸ்ரோவில் நிகழ்வில் இணையவழியில் பங்கேற்கவுள்ளார்.

லேண்டரும், அதனுள் இருக்கும் ரோவா் சாதனமும் வெற்றிகரமாக தரையிறங்கும்பட்சத்தில், நிலவின் தென் துருவத்துக்கு அருகே தடம்பதித்த உலகின் முதல் தேசமாக இந்தியா உருவெடுக்கும்.

Leave A Reply

Your email address will not be published.