ட்விட்டரில் விரைவில் ஆடியோ, விடியோ கால் வசதி!

ட்விட்டரில் விரைவில் ஆடியோ மற்றும் விடியோ கால் வசதி வரவுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

நவீன காா்களை உற்பத்தி செய்யும் டெஸ்லா, தனியாா் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ்-எக்ஸ் உள்ளிட்டவற்றின் உரிமையாளரான எலான் மஸ்க், கடந்த ஆண்டு ட்விட்டரை கையப்படுத்தினார்.

தொடர்ந்து ட்விட்டர் நிறுவனத்தில் மற்றும் ட்விட்டர் தளத்தில் மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார்.

சமீபத்தில் ட்விட்டரின் பிரபல லோகோவான நீலக்குருவிக்கு பதிலாக கருப்பு நிற பின்னணியில் ‘எக்ஸ்'(X) என்று லோகோவை மாற்றினார்.

இதையடுத்து ‘ட்விட்டரில் விடியோ மற்றும் ஆடியோ கால் வசதி வருகிறது. இது ஐஓஎஸ், ஆண்ட்ராய்டு, மேக் மற்றும் கணினியில் செயல்படும். இதற்கு போன் நம்பர் எதுவும் தேவையில்லை. உலகளாவிய பயனுள்ள முகவரிகளின் தொகுப்புதான் ட்விட்டர். அவை தனித்துவமானது’ என்று பதிவிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.