வேலை நிறுத்தம் காரணமாக ரயிலின் மேற்கூரையில் ஏறி பயணித்த மாணவர் தவறி விழுந்து உயிரிழப்பு.

இன்று (12) காலை ஹொரபே புகையிரத நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தின் கூரையில் ஏறி பயணம் செய்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இறந்தவர் டபிள்யூ . டி.ஐ.பெரேரா என்ற 18 வயது மாணவன் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவர் கம்பஹ மொரகொட பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் பொறியியல் தொழில்நுட்பம் தொடர்பான பாடநெறியை பயின்று வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


புகையிரதத்தின் மேற்கூரையில் ஏறி பயணித்த குறித்த இளைஞன் மரத்திலோ கம்பியிலோ மோதியிருக்கலாம் என நம்பப்படுவதாகவும், மரணம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் ரயில்வே திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இன்று (12) ஆரம்பிக்கப்பட்ட புகையிரத பணிப்புறக்கணிப்பு காரணமாக மக்கள் இவ்வாறு அசௌகரியங்களுக்கு உள்ளாகி பயணித்ததனால் ஏற்பட்ட விபத்தாக மக்கள் விசனப்படுகின்றனர். இன்று காலை முதல் இந்நிலையே புகையிரத பயணங்களில் காணப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.