இன்று இரவு முதல் ரயில்கள் அத்தியாவசிய சேவையாகும்?

இன்று (12) நள்ளிரவு முதல் புகையிரதத்தை அத்தியாவசிய சேவையாக மாற்றவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன, ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தெரிவித்தார்.

இதற்கான பிரேரணை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

“இன்று நள்ளிரவு 12 மணி முதல் இலங்கை புகையிரத சேவையை பொதுமக்களின் அத்தியாவசிய சேவையாக மாற்றுமாறும், நாளை முதல் மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்குமாறும் ஜனாதிபதியிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுக்கிறேன். எந்தவொரு வேலைநிறுத்தத்திலும் பங்கேற்காமல், பொறுப்பு வாய்ந்து சேவையில் ஈடுபடும் 18,000 இதர ஊழியர்களுக்காகவும் இந்த முடிவை எடுப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

இதன் மூலம் நாளை (13) முதல் மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை தவிர்க்க முடியும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.