தென் ஆப்பிரிக்கா முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா பேத்தி புற்று நோயால் மரணம்.

தென் ஆப்பிரிக்கா நாட்டில் ஜனநாயக முறைப்படி முதல் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் நெல்சன் மண்டேலா. நிற வெறிக்கு எதிராக போராடிய தலைவர்களில் முக்கியமானவராக திகழ்ந்தார். இவரது பேத்தி ஜோலேகா மண்டேலா (வயது 43). இவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் அவருக்கு கல்லீரல், நுரையீரல், முதுகுதண்டு போன்ற உறுப்புகள் பாதிக்கப்பட்டது.

இதையடுத்து அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று மரணம் அடைந்து விட்டதாக நெல்சன் மண்டேலா அறக்கட்டளை தெரிவித்து உள்ளது. அவரது குடும்பத்தினருக்கு அறக்கட்டளை இரங்கலும் தெரிவித்தது. புற்று நோயால் உயிர் இழந்த ஜோலேசா மண்டேலா ஒரு சிறந்த எழுத்தாளராக திகழ்ந்தார். தன் வாழ்நாள் முழுவதும் சுகாதாரம் மற்றும் நீதிக்காக உழைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.