ரூ.1.15 கோடி வந்த மின் கட்டணம்.. அதிர்ச்சியில் திகைத்த நகைக் கடைக்காரர்!

நகை கடைக்காரருக்கு ரூ.1.15 கோடி மின் கட்டணம் வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலத்திம், ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் கோட்டூர் பகுதியில் அஷோக் குமார் என்பவர் சிறிய நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு சாதாரணமாக மாதந்தோறும் இவரது கடைக்கு ரூ.8 ஆயிரம் வரை கட்டணம் வரும்.

இவர் தவறாமல் அவரது மாத கட்டணத்தை செலுத்தி வந்தார். ஆனால், இந்த மாதம் மட்டும் மின் கட்டணம் ரூ.1.15 கோடி வந்துள்ளது.

இந்நிலையில், ஒரு கோடி ரூபாய் மின் கட்டணம் வந்ததும் அவர் என்ன செய்வதென்று தெரியாமல் இது குறித்து அப்பகுதி மின் வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்தார். அவரது கடைக்கு வந்த அதிகாரிகள் மின்சார மீட்டரை சோதனையிட்டதில், அந்த மீட்டர் பெட்டி விரைவில் சூடாவதால்தான் மின் கட்டணமும் மிக அதிகமாக வந்துள்ளது என்று கூறினார். விரைவில் புதிய மீட்டர் பொருத்தப்பட்டு புதிய கட்டணத்திற்கான ரசீது வழங்கப்படும் என்று அந்த அதிகாரிகள் கூறி சென்றனர்.

Leave A Reply

Your email address will not be published.