ஏற்கனவே காணாமல்போய் யாழ்ப்பாணத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சிறுவன் மீண்டும் மாயம்!

கஹவத்தை – ஓபாத்த பகுதியைச் சேர்ந்த 13 வயதான சிறுவன் ஒருவர் கடந்த 2023.03.13 ஆம் திகதி முதல் 7 மாத காலமாகக் காணாமல் போயுள்ளார் என்று அவரது பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

ஓபாத்த இலக்கம் ஒன்று தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயின்ற 13 வயதான நாகராஜ் திஷோர்காந்த் என்ற சிறுவனே இவ்வாறு காணாமல்போயுள்ளார்.

காணாமல்போன சிறுவன் இதுவரை வீடு திரும்பவில்லை என்று பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

சிறுவன் ஏற்கனவே ஒரு தடவை காணாமல்போன நிலையில், யாழ்ப்பாணத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்டார் என்றும் பெற்றோர் கூறுகின்றனர்.

இந்தநிலையில், சிறுவன் மீண்டும் காணாமல்போயுள்ளமை தொடர்பில் கஹவத்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிறுவன் தொடர்பான தகவல்கள் தெரியும் பட்சத்தில், 076 3718398 என்ற இலக்கத்துக்கு அறியத் தருமாறு பெற்றோர் கேட்டுக்கொள்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.