லடாக் யூனியன் பிரதேச உள்ளாட்சித் தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணி அபார வெற்றி

லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள கார்கில் மாவட்டத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், இந்தியா கூட்டணி அபார வெற்றி பெற்றது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்ட பிறகு, லடாக் யூனியன் பிரதேசத்திற்கு உட்பட கார்கில் மாவட்டத்தில், முதன் முறையாக வாக்குப்பதிவு இயந்திரம் மூலம், லடாக் தன்னாட்சி மலை வளர்ச்சிக் குழுவிற்கான பொதுத்தேர்தல் நடைபெற்றது.

24 தொகுதிகளை உள்ளடக்கிய இந்தத் தேர்தலில், ஜம்மு காஷ்மீரின் தேசிய மாநாட்டு கட்சி, காங்கிரஸ், பாஜக என மும்முனை போட்டி நிலவியது. கடந்த 4-ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில், சுமார் 78 சதவிகிதம் வாக்குகள் பதிவானதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை நேற்று தொடங்கிய நிலையில், தேசிய மாநாட்டுக் கட்சி 12 இடங்களிலும், காங்கிரஸ் 10 இடங்களிலும், பாஜக மற்றும் சுயேச்சைகள் தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன. ஒட்டுமொத்தமாக இந்தியா கூட்டணி 22 இடங்களை கைப்பற்றி பெருவாரியான வெற்றியை வசப்படுத்தியது. இதனை தேசிய மாநாட்டுக் கட்சியினர் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகமாகக் கொண்டாடினர்.

கடந்த தேர்தலில் 16 இடங்களை கைப்பற்றிய பாஜக, ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்ட பிறகு, நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில் ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.