மட்டக்களப்பில் விபத்தில் படுகாயமடைந்த சப் இன்ஸ்பெக்டர் மரணம்!

மட்டக்களப்பு, வவுணதீவுப் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த பொலிஸ் சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.

மட்டு. தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் நீதிமன்றப் பிரிவில் பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றி வந்த நாற்குடா பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சப் இன்பெக்டர் சபேசன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் கடந்த சனிக்கிழமை வவுணதீவிலுள்ள தனது பண்ணைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது வவுணதீவுப் பகுதியில் உயர் இரத்த அழுத்தம் ஏற்பட்டதையடுத்து மோட்டார் சைக்கிளில் இருந்து வீழ்ந்து விபத்துக்குள்ளாகியிருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.