திடீரென மயங்கி விழுந்த வைகோவின் கார் டிரைவர் – மர்ம மரணம்!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் கார் டிரைவர் மயங்கி விழுந்து உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை பாளையங்கோட்டை குலவணிகர்புரத்தைச் சேர்ந்தவர் சின்னத்துரை இவருக்கு 59 வயது. இவர் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் கார் டிரைவராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று நெல்லை அருகே இட்டேரி பகுதியில் உள்ள தோட்டத்து பங்களாவிற்கு சென்றுள்ளார்.

அங்கு உள்ள நீச்சல் குளத்தில் நண்பர்களுடன் குளிக்க சென்றார், அப்போது நீச்சல் குளத்தின் அருகில் டிரைவர் திடீரென்று தவறி விழுந்து மயங்கினார். உடனே அவரது நண்பர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இந்நிலையில், அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் இன்னோஸ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். அங்கு மருத்துவமனைக்கு ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் தி.மு.ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் நிஜாம் உள்ளிட்ட நிர்வாகிகள் குவிந்தனர்.

பாளையங்கோட்டை குலவணிகர்புரத்தில் சின்னத்துரை உடல் அடக்கம் இன்று நடக்கிறது. இதில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்துகிறார்.

Leave A Reply

Your email address will not be published.