தமிழ் சினிமாவின் முதல் கோடீஸ்வரர் இவர்தானாம்!

சினிமாவைப் பொறுத்தவரைக்கும் இன்று பல முன்னனி நடிகர்கள் நடிகைகள் என தனது சம்பளமாக கோடிகளில் வாங்கி இரைத்துக் கொண்டிருக்கின்றனர். அதுவும் ரஜினி, விஜய், அஜித், கமல் போன்ற நடிகர்களின் சம்பளம் 100 லிருந்து 150 கோடி வரை எகிறியிருக்கிறது.

கோடிகளில் சம்பளம் என்பது இன்றைய சினிமாவில் சர்வசாதாரணமாக ஆகிவிட்டது. ஆனால் அந்தக் காலங்களில் அதாவது எம்ஜிஆர், சிவாஜி இருந்த காலங்களில் அவர்களின் சம்பளம் ஆரம்ப நிலையில் ஆயிரங்களில் தான் இருந்திருக்கின்றது.

அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து லட்சங்களில் சம்பளங்களை வாங்கத் தொடங்கினார்கள். இந்த நிலையில் தமிழ் சினிமாவில் முதல் கோடீஸ்வரர் யார் என்பது இப்போது தெரியவந்திருக்கிறது.

ஆனந்த விகடன் பத்திரிக்கையின் நிறுவனரான எஸ்.எஸ். வாசன் தான் தமிழ் சினிமாவின் முதல் கோடீஸ்வரராம். அதுவும் அவர் தயாரித்த சந்திரலேகா என்ற படம்தான் அவரை கோடிஸ்வரராக்கியிருக்கிறது.

1948 ஆம் ஆண்டு வெளியான சந்திரலேகா படத்தை இயக்கி தயாரித்தது எஸ்.எஸ்.வாசன்தான். இந்தப் படத்தில் எம். கே. ராதா, என். எஸ். கிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட முதல் தமிழ்ப்படமாகவும் சந்திரலேகா அமைந்தது.

ஹாலிவுட் படங்களுக்கு இணையாக எடுக்கப்பட்ட முதல் பிரம்மாண்ட தமிழ் படமாக, ஒட்டுமொத்த சினிமாவையுமே திரும்பி பார்க்க வைத்த படமாக சந்திரலேகா விளங்கியது. எஸ்.ராஜேஸ்வரராவ் இசையில் படத்தின் எல்லா பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றது. எம்.டி பார்த்தசாரதி பின்னணி இசை அமைத்திருந்தார்.

இந்த படத்தை தயாரிக்க மூன்றரை ஆண்டுகாலம் ஆனதாம். இந்தப் படத்திற்காக எஸ்.எஸ்.வாசன் ஒதுக்கிய தொகை 30 லட்சமாம். இன்றைய மதிப்பீட்டின் படி 300 கோடி வரை இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.