லியோ படத்திற்கு வந்த சோதனை! லியோ படம் வெளிவருவதில் புதிய சிக்கல்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார்.

அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். லியோ திரைப்படம் அக்டோபர் 19-ம் தேதி பல மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், ஐதராபாத் நீதிமன்றத்தில் சீதா ராமா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் நாக வம்சி என்பவர் இந்த படத்தின் பெயர் ‘லியோ’ என்பதை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்து மனுத்தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பான விசாரணை நேற்று நடைபெற்றது. இதில் ‘லியோ’ படத்தின் தெலுங்கு பதிப்பை வரும் 20-ஆம் தேதி வரை திரையிட தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து விஜய்யின் லியோ படத்திற்கு ஒவ்வொரு பிரச்சனைகளாக வந்துகொண்டே இருக்கிறது. தமிழகத்தில் அதிகாலை 4 மணி காட்சி வேண்டும் என கேட்டு நீதிமன்றத்தில் முறையிட்ட தயாரிப்பாளர் லலித். வழக்கு தொடரப்பட்டது ஆனால் 4 மணி காட்சி கிடையாது என்றும் தமிழக அரசு உத்தரவிட்டால் 7 மணி காட்சி திரையிடலாம் என நீதிமன்றத்தில் கூறப்பட்டது.

மேலும் லியோ படம் சொன்ன தேதியில் வெளிவருமா வராதா என்று ரசிகர்கள் தற்போது வரை பீதியிலேயே இருக்கிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.