மக்கள் போராட்டத்தை ஒடுக்க உத்தரவிட்டது நான்தான் : ரணில் ! (வீடியோ)

பாராளுமன்றத்தை சுற்றி வளைத்து மக்கள் போராட்டம் வந்த போது, ​​ஆட்சியை ஏற்று, நல்லவிதமாகவோ அல்லது கெட்டவிதமாகவோ, போராட்டத்தை அடக்க ராணுவ தளபதிக்கு உத்தரவிட்டதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார் .

ஐக்கிய தேசியக் கட்சியினர் விட்டுக்கொடுப்பவர்கள் அல்ல என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார் .

போராட்டம் உச்சத்தை அடைந்த போது , அதை நிறுத்த அன்று ஒருவரும் இருக்கவில்லை. கட்சி தலைவர்கள் என்னையும் பதவி விலகச் சொன்னார்கள். நாடு எரிந்து கொண்டிருந்த போது ஜனாதிபதி கப்பலில் இருந்தார். அப்படி இருக்கும் போது புதியதொரு அரசை உருவாக்க முடியுமா? நான் விட்டுச் சென்றிருந்தால் எப்படி ஒருவரை நியமிப்பது?

ரணில் , பதவி விலகுகிறார்கள் இல்லை என எனது வீட்டை கொழுத்தினார்கள். அப்போதாவது நான் விலகுவேன் என நினைத்தார்கள். யூஎன்பீகாரர்கள் அப்படி விலக மாட்டார்கள்.

நான் கெபினட்டை கூட்டினேன். அப்போதும் என்னை விலகச் சொன்னார்கள். அந்நேரம் பாராளுமன்றத்தை கைப்பற்ற வந்தார்கள். எல்லோரும் ஓடி விட்டார்கள். அந்நேரம் நான் இராணுவ தளபதிக்கு நல்ல விதமாக அல்லது மோசமான விதத்திலாவது இந்த போராட்டத்தை நிறுத்த உத்தரவிட்டேன். போராட்டத்தை நிறுத்தி, கெபினட்டை கூட்டி , நாட்டை சுமுக நிலைக்கு கொண்டு வந்தேன். நான் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லவே பொறுப்பேற்றேன்.

இவரால் இதை செய்ய முடியாது. இவர் ராஜபக்சவினரை காப்பாற்றவே அரசை பொறுப்பேற்கிறார் என்றார்கள். உண்மைதானே?

நான் ஜனாதிபதி கோட்டாபயவிடம் பொறுப்பை தருமாறு வாய் மொழி மூலமோ அல்லது எழுத்து மூலமோ கேட்கவில்லை. அவர் பொறுப்பேற்கச் சொன்னதால் பொறுப்பேற்றேன். ஒரு ஜனாதிபதி , நாட்டை பொறுப்பேற்குமாறு சொன்னால் , நாட்டின் தலைவர்களில் ஒருவரான எனது கடமை , நாட்டை பொறுப்பேற்றபதுதான்.

நான் பதவியேற்றது இலங்கையில் உள்ள அனைவரையும் பாதுகாப்பதற்கே. நான் அரசை பொறுப்பேற்கும் போது தேவையான எதுவும் இருக்கவில்லை. எரிபொருள் இல்லை. பசளைகள் இல்லை. பணம் இல்லை.

முன்னர் முன்னைய அரசு பிக்பொக்கட் அடித்தே முன்னைய ஆட்சியை நடத்தினர். இப்போது அதை செய்ய முடியாது. எம்மிடம் உள்ள பணத்தில் வாழ வேண்டியுள்ளது. இப்போது இல்லாதவை உள்ளன. பங்களாதேசின் கடனை திருப்பி செலுத்தி விட்டோம். அதேபோல இந்திய கடனையும் அடைப்போம் .

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார் .

Leave A Reply

Your email address will not be published.