அடக்குமுறைகளுக்கு எதிராகத் தமிழரசுக் கட்சி போராட்டம்!

வடக்கு – கிழக்கில் தமிழ் மக்கள் மீது முன்னெடுக்கப்பட்டு வரும் அடக்குமுறைகளுக்கு எதிராக இலங்கைத் தமிழரசுக் கட்சியினரால் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா பழைய பஸ் நிலையப் பகுதியில் இன்று காலை10 மணியளவில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வடக்கு – கிழக்கில் நில அபகரிப்புக்கள் நிறுத்தப்பட வேண்டும், மயிலத்தமடு மேய்ச்சல் தரையில் ஏற்ப்படுத்தப்பட்டுள்ள சட்டவிரோதக் குடியேற்றங்களை உடனே நிறுத்து, செட்டிகுளத்தில் கீழ்மல்வத்தோயா திட்டத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ள குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்து, காணாமல் ஆக்கப்பட்டோருக்குத் தீர்வை வழங்கு, இந்து ஆலயங்களை ஆக்கிரமிக்காதே, அவற்றில் விகாரைகளை அமைக்காதே, திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை நிறுத்து, இஸ்ரேல் – காஸா மோதலை சர்வதேசம் நிறுத்த வேண்டும் போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் கோஷங்களையும் எழுப்பியிருந்தனர்.

இந்தப் போராட்டத்தில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், இரா.சாணக்கியன், தமிழரசுக் கட்சியின் செயலாளர் ப.சத்தியலிங்கம், மாவட்ட அமைப்பாளர் ந.கருணாநிதி மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள், புதிய ஜனநாயக மாக்ஸ்சிக லெனினிச கட்சியின் உறுப்பினர்கள் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.