பௌத்த பிக்குவின் கத்திக் குத்துக்கு இலக்கான பொலிஸ் கான்ஸ்டபிள் உயிரிழந்தார்

பௌத்த பிக்குவின் கத்திக் குத்துக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் உயிரிழந்துள்ளார்.

தெனியாய பொலிஸ் பிரிவில் கடமையாற்றிய கட்டுவன, உட கோமடிய பிரதேசத்தை சேர்ந்த கமகே தனுஷ்க என்ற பொலிஸ் கான்ஸ்டபிளே , கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த போது உயிரிழந்துள்ளார்.

கடந்த வியாழன் (16) பல்லேகம கங்கொட வீதியிலுள்ள முதியோர் இல்லத்திற்கு அருகில் வைத்து பொலிஸ் கான்ஸ்டபிளுடன் , பௌத்த பிக்குவின் மூத்த சகோதரியுடனான காதல் குறித்து இருவருக்குமிடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் பின் , கான்ஸ்டபிள் கத்தியால் குத்தப்பட்டார்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 20 வயதான பௌத்த பிக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.