அரச ஆசிரிய சேவைக்கு ஆட்சேர்ப்பு.

நாடளாவிய ரீதியில் தேசிய பாடசாலைகளில் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதாவது தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழி மூலமாக 44 பாடங்களுக்கான தகுதியான பட்டதாரிகளிடமிருந்த இந்த விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இதற்கமைய www.doenets.lk எனும் இணையதளத்தின் Our Service எனும் பகுதியின் கீழ் உள்ள Online Application – Recruitment Exam இல் வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பங்களை இணையவழி மூலமாக எதிர்வரும் டிசம்பர் 01ஆம் திகதி இரவு 9 மணிக்கு முன்னர் சமர்ப்பிக்க முடியும் எனவும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள 17.11.2023 வெள்ளிக்கிழமை வெளியான அரச வர்த்தமானி அறிவித்தலில் 4 – 8ஆம் பக்கத்தை பார்வையிட முடியும்.

Leave A Reply

Your email address will not be published.