முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை கொலை செய்வேன் என ரகளை செய்த இராணுவ சிப்பாய் கைது

கொழும்பு 7, விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டுக்குச் சென்று , ஒருவார காலத்துக்குள் கண்டே பிடிக்க முடியாத விதத்தில் அவரைக் கொன்று விடுவேன் என்று கூறிய முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டதாக குருந்துவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.

இனம் தெரியாத நபர் ஒருவர் கலவரமாக நடந்து கொள்வதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய பொலிஸ் குழுவொன்று அங்கு சென்று சந்தேக நபரை கைது செய்துள்ளது.

ஹொரபாவிட்ட பமுனுகம கிரிவெல பிரதேசத்தில் வசிக்கும் குறித்த சந்தேக நபர் தனது சகோதரியின் கிருலப்பன வீட்டில் தங்கி மனநல பிரச்சனை காரணமாக , வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.