பிரதமர் மோடி திருப்பதி வருகை – பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

பிரதமர் மோடி நாளை திருப்பதிக்கு வர உள்ளார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாள் தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மேலும், வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்களில் பக்தர்களின் எண்ணிக்கை அளவுக்கு அதிகமாக இருக்கும்.

பக்தர்களின் வசதிக்காக திருப்பதி தேவஸ்தானம் தரிசன முறையில் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. இங்கு, பக்தர்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் என வருகை தருகின்றனர்.

அந்த வகையில், பிரதமர் மோடி வரும் 27 ஆம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வருகை புரிகிறார். இதனை முன்னிட்டு அன்றைய தினம் விஐபி தரிசனங்களை திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. மேலும், அதற்கு முந்தைய நாள் அதாவது 26 ஆம் தேதியே பரிந்துரை கடிதங்கள் ஏற்கப்படாது எனவும் கூறப்பட்டுள்ளது.

பிரதமர் பயணத்தின் போது பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்துதிருப்பதி மாவட்ட ஆட்சியர்வெங்கட ரமணா தலைமையில் அனைத்து துறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அவரது பாதுகாப்பு அதிகாரிகள் ரேணிகுண்டா விமான நிலையம், திருப்பதி மற்றும் திருமலைக்கு சென்று ஆய்வு செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.