விலங்குகளின் கொழுப்பிலும் சமையல் எண்ணெயிலும் பறந்த மிகப்பெரிய விமானம்.

உலகின் மிகப் பெரிய பயணிகள் விமானம் முதல்முறையாக விலங்குகளின் கொழுப்பிலும் சமையல் எண்ணெயிலும் பறந்துள்ளது.

நீடித்து நிலைத்திருக்கும் விமானத்துறை எரிபொருள் என இதனை கூறப்படுகின்றது.

டுபாயில் வெற்றிகரமாக நடத்தப்பட்ட செயல்முறைப் பயிற்சியில் Emirates நிறுவனத்தின் A380 விமானம் பங்கேற்றது.

விமானத்தின் 4 இயந்திரங்களில் ஒன்றில் நீடித்து நிலைத்திருக்கும் விமானத்துறை எரிபொருள் முழுமையாகப் பயன்படுத்தப்பட்டது.

Sustainable Aviation Fuels (SAF) எனப்படும் அது சமையல் எண்ணெய், விலங்குகளின் கொழுப்பு, விவசாயக் கழிவுகள் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றது.

தற்போது பயணிகள் விமானங்களின் இயந்திரங்களில் வழக்கமான எரிபொருளுடன் SAF எரிபொருள் பாதி அளவில் மட்டுமே பயன்படுத்த அனுமதி உண்டு. SAF முழுமையாகப் பயன்படுத்தப்படும்போது அதன் ஆற்றல் வழக்கமான எரிபொருளின் ஆற்றலுக்கு ஈடாக இருக்குமா என்பது ஆராயப்படுகிறது.

SAF எரிபொருளிலிருந்து வெளியாகும் கரியமில வாயு, சாதாரண எரிபொருளைக் காட்டிலும் மிகக் குறைவாகும். 2050ஆம் ஆண்டுக்குள் கரியமில வாயு வெளியேற்றத்தை முற்றிலும் குறைக்க அனைத்துலக விமானத்துறை திட்டமிடுகிறது.

Leave A Reply

Your email address will not be published.