ஊடகவியலாளர் தினேத் குமார கைது செய்யப்பட்டமை பொலிஸாரின் அத்துமீறல் – ‘சுதந்திர ஊடக இயக்கம்’ வலியுறுத்தியுள்ளது.

தேசிய தொலைக்காட்சி ஊடகவியலாளர் தினேத் குமார கைது செய்யப்பட்டமை பொலிஸாரின் அத்துமீறல் என ‘சுதந்திர ஊடக இயக்கம்’ வலியுறுத்துகிறது என சுதந்திர ஊடக இயக்கத்தின் அழைப்பாளர் ஹனா இப்ராஹிம் மற்றும் செயலாளர் லசந்த டி சில்வா ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய தொலைக்காட்சியின் குருநாகல் மாவட்ட செய்தியாளர் / ஊடகவியலாளர் தினேத் குமாரவை கைது செய்து விசாரணை செய்த பொலிஸார் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததுடன் , வரம்பு மீறி செயற்பட்டமை தெரியவந்துள்ளதாக சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது.

ஊடகவியலாளர் தினேத் குமார 30. 11. 2023 அன்று காலை பிங்கிரிய பொலிஸ் நிலையத்திற்கு வெளியே தனது ஊடக அறிக்கையிடல் பணி தொடர்பாக புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்ததாகவும், அங்கு வந்த பொலிஸாரால் அவமதிக்கப்பட்டு கைது செய்யப்பட்டு தாக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார் .

சுதந்திர ஊடக இயக்கம் நடத்திய விசாரனையில், தாம் வெளியிட்ட செய்தி தொடர்பில் தகவல் வழங்கிய குழுவொன்றை , அச் செய்தியால் இலக்கான தரப்பினரின் முறைப்பாட்டின் பேரில் பொலிஸாருக்கு அழைக்கப்பட்டதை , செய்தியாக்கவே தான் அங்கு சென்றதாக குறிப்பிட்டுள்ளார்.

செய்தி தொடர்பான தகவல்களை வழங்கிய தரப்பினரை முறைப்பாடு எனும் பெயரில் விசாரணைக்கு அழைக்க பொலிஸாருக்கு அதிகாரம் இல்லை எனவும் அது நீதிமன்றில் தீர்க்கப்பட வேண்டிய விடயம் எனவும் சுதந்திர ஊடக இயக்கம் கருத்து தெரிவித்துள்ளது. இருந்த போதிலும் ஊடகவியலாளர் தினேத் குமாரவை அவமானகரமான முறையில் கைது செய்து கைரேகைகளை பெற்றுக் கொண்ட பொலிஸார் செயற்பட்ட விதமும் பிழையானது என சுதந்திர ஊடக இயக்கம் மேலும் தெரிவித்துள்ளது .

ஊடகவியலாளர் தினேத் குமாரவை பிணையில் விடுவித்துள்ள ஹெட்டிபொல நீதவான், ஊடகவியலாளர்களின் தொழில் கடமைகளில் தலையிடுவதற்கு பொலிஸாருக்குத் தகுதியோ அனுமதியோ கிடையாது என திறந்த நீதிமன்றில் அறிவித்துள்ளார்.

இதன்படி, பொலிஸ் ஆணைக்குழு மற்றும் ஏனைய பொறுப்பு வாய்ந்த திணைக்களங்கள் இச்சம்பவம் தொடர்பில் உடனடி விசாரணை நடத்தி , ஊடகவியலாளருக்கு அநீதி இழைக்கப்பட்டமைக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்குமாறும் பொலிஸ் ஆணையாளர் தலைமையிலான பொலிஸ் திணைக்களத்திற்கு தேவையான அறிவுறுத்தல்கள் மற்றும் உத்தரவுகளை பிறப்பிக்குமாறும் , எனவும் எதிர்காலத்தில் இதுபோன்ற செயல்கள் நடக்காமல் தடுக்க வேண்டும் சுதந்திர பத்திரிகை இயக்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.