ஆயுர்வேத மருத்துவர் மர்ம மரணம்… காரணம் என்ன?

கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டத்தில் குஷல்நகர் பகுதியில் ஆயுர்வேத மருத்துவர், காருக்குள் இறந்து கிடந்த நிலையில் கண்டறியப்பட்டுள்ளார்.

இறந்தவர் மருத்துவர் சதீஸ் (40) என்றும் விஷம் அருந்தி அவர் இறந்திருக்கலாம் எனவும் காவலர்கள் தெரிவிக்கின்றனர்.

சமீபத்தில், பெங்களூரு காவல் துறை கண்டறிந்த பெண் சிசு கொலை கும்பலுடன் இவரும் தொடர்பில் இருந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுறது.

இதற்கிடையில் மருத்துவமனையில் பணியாற்றிய பெண் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் இருவர் மருத்துவர்கள்.

இந்தக் கும்பல் 900-க்கும் அதிகமான பெண் சிசு கொலைகளில் ஈடுபட்டுள்ளதாக பெங்களூரு காவல் ஆணையர் பி தயானந்தா தெரிவித்துள்ளார்.

மண்டியா பகுதியில் வெல்லம் தயாரிக்கும் ஆலையை அமைத்து இந்தக் கும்பல் செயல்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கருத்தரித்திருக்கும் பெண்களை அணுகி சிசு எந்த பாலினத்தைச் சேர்ந்தது என்பதையறிய விரும்புகிறீர்களா என தங்கள் வலைக்குள் இழுத்து பெண் சிசுவாக இருந்தால் கருக்கலைப்பு செய்யும் வேலையை செய்து வந்துள்ளனர்.

இதற்கு கட்டணமாக 20 முதல் 25 ஆயிரம் ஒவ்வொருவரிடம் வாங்கியுள்ளனர் என காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

மருத்துவர் சந்தேகத்துக்குரிய வகையில் இறந்தது குறித்து காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.