நீதியே இல்லாத நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? – வெட்கமே இல்லையா என்று சுமந்திரன் கேள்வி.

நீதியே இல்லாத நாட்டில் நீதி அமைச்சராக இருப்பதற்கு வெட்கமில்லையா என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்சவைப் பார்த்து நாடாளுமன்றத்தில் வைத்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று அவர் உரையாற்றும்போது மேலும் கூறியதாவது:-

“ஆப்கானிஸ்தான் நாட்டின் கப்பல் போக்குவரத்து அமைச்சரவைப் போன்றே எமது நாட்டின் நீதி அமைச்சர் உள்ளார் என நான் கூறுவது வழக்கம். இம்முறையாவது அதனைச் சொல்லாமல் விடுவமோ என்று நினைத்தால் கடந்த சில நாட்கள் இந்த நாட்டில் இடம்பெற்றவைகளைப் பார்க்கும்போது நீதியே இல்லாத நாட்டில் ஒரு நீதி அமைச்சர் என்றே எனது பேச்சை ஆரம்பிக்க வேண்டியுள்ளது.

நீதி இல்லாத நாடு எனச் சொல்வதற்குப் பிரதான காரணம் நாட்டிலே வெவ்வேறு மக்களுக்கு வெவ்வேறு விதமாக சட்டங்கள் பிரயோகிக்கப்படுகின்றமை அப்பட்டமாகத் தெரிகின்றது. இதனைச் சுட்டிக்காட்ட வேண்டிய தேவை இல்லை.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.