வட்டுக்கோட்டைப் பொலிஸாரின் அராஜகம் ஒழிக” “அப்பாவிகளைத் தண்டிக்காதே; குற்றவாளிகளைத் தப்பவிடாதே”.

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டைப் பொலிஸாரின் கொடூர சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த சித்தங்கேணியைச் சேர்ந்த நாகராசா அலெக்ஸுக்கு நீதி கேட்டு வட்டுக்கோட்டையில் இன்று கண்டனப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்துக்குச் செல்லும் வீதியில் பொலிஸார் குவிக்கப்பட்டு வீதித் தடைகள் அமைக்கப்பட்டிருந்தன.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் வட்டுக்கோட்டைச் சந்தியில் பிற்பகல் 3 மணியளவில் உயிரிழந்த இளைஞருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு போராட்டம் ஆரம்பமானது.

நாகராசா அலெக்ஸின் மரணத்துக்கு நீதி கோரியும், வட்டுக்கோட்டைப் பொலிஸ் நிலையத்தில் தொடர்ச்சியாக அரங்கேற்றப்பட்டு வரும் சட்டவிரோத சித்திரவதைகளை நிறுத்தக் கோரியும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள், “வட்டுக்கோட்டைப் பொலிஸாரின் அராஜகத்துக்கு முடிவு கட்டு!”, “அப்பாவிகளைத் தண்டிக்காதே! குற்றவாளிகளைத் தப்பவிடாதே!!”, “வேலியே பயிரை மேய்கின்றதா?”, “எமது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்!”, “தடுப்புக்காவல் படுகொலைகளை நிறுத்து!” போன்ற பதாகைகளை ஏந்திக் கோஷங்களை எழுப்பினார்கள்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன், ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ், படுகொலை செய்யப்பட்ட அலெக்ஸின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டார்கள்.

Leave A Reply

Your email address will not be published.