இந்தியாவில் உலாவிய இஸ்ரேல் கப்பல் மீது தாக்குதல்.. குஜராத்தில் அதிர்ச்சி!

சவுதி அரேபியாவில் இருந்து கர்நாடகாவின் மங்களூருவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றிக் கொண்டு சரக்கு கப்பல் ஒன்று வந்து கொண்டிருந்தது. குஜராத்தின் போர் பந்தர் அருகே நடுக்கடலில் அந்த கப்பல் மீது ட்ரோன் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாக கூறப்படுகிறது. கப்பல் நிறுவனம் இந்திய கடற்படையின் உதவியை கோரியதை தாக்குதல் சம்பவம் குறித்து தெரியவந்தது. தாக்குதலில் அதீத சத்தம் மற்றும் ஒளியுடன் வெடித்த நிலையில், கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது. சில மணி நேரங்களில் தீ அணைக்கப்பட்டபோதும், செயல்பாடுகள் பாதிக்கப்பட்டதால் சரக்கு கப்பல் நடுக்கடலில் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த சரக்கு கப்பலில் 20 இந்தியர்கள் உட்பட 23 பேர் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது. கப்பலில் சிக்கியவர்களை மீட்பதற்காக, இந்திய கடலோர காவல்படையைச் சேர்ந்த விக்ரம் போர் கப்பல் புறப்பட்டது. ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளான கப்பல், இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த நிறுவனத்திற்கு சொந்தமானது என தகவல் வெளியாகியுள்ளது. தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பும் இதுவரை பொறுப்பு ஏற்கவில்லை.

இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கிய அக்டோபர் முதல் செங்கடலில் வணிகக் கப்பல்கள் மீது ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தியுள்ளனர். அதேபோல், ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர படையினர் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. கடந்த மாதம் இந்திய பெருங்கடலில் இஸ்ரேலிய கப்பலை, ஈரான் தாக்கியதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.